கொழுப்பு மற்றும் புற்றுநோயை தடுக்கும் கத்தரிக்காய்
கொழுப்பு மற்றும் புற்றுநோயை தடுக்கும் கத்தரிக்காய் :-
ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் திறன் கொண்டது. குறிப்பாக நாட்டு கத்தரிக்காய் நல்ல மருத்துவ குணம் கொண்டது.
கொழுப்புச் சத்தைக் குறைக்கும்:-
கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து, ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதயும் ஓர் உன்னதமான மருந்தாகும். இதில் இருக்கும் நார்ச்சத்து, பசியை அடக்கி வைப்பதால், உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.
புத்துணர்வை தரும்:-
கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக்கூடியது,அது மட்டுமின்றி ஆன்த்தோ சயனின், புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு, மேலும் பரவாமல் தடுக்கிறது.
சுவாசப் பிரச்சனைகள்:-
கத்தரிக்காய் இலைகள் ஆஸ்துமா, முச்சுக் குழல் நோய்கள் போன்ற சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவும். கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளதால் நம் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காயில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது. அது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க கூடியது.
நல்ல தூக்கத்தை உண்டாக்கும்:-
கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுவோருக்கு, இது நல்ல தீர்வை தரும்.
இதய பாதுகாப்பு:-
கத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்தத்தில் சேர்த்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது. இளங்கத்தரிக்காயில் உள்ள ஆன்த்தோ சயனின் என்ற வேதிப்பொருள் வயது முதிர்வை தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.
புற்றுநோயை தடுக்கும்:-
கத்தரிக்காயில் உள்ள சத்துகள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய காய்களைச் சாப்பிட்டால்தான் உடலில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டில் வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய கைகளுள் இதுவும் ஒன்றாகும்.
தாக்களியைப் போலவே புரதம், கலோரி அளவு, தாது உப்புக்கள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. அனால் விட்டமின் "ஏ" யும் "சி "யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் "பி" தக்க அளவில் உள்ளது. சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாற, கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் "பி" பயன்படுகிறது.
வாயு நோயைத் தடுத்து, பசின்மையைப் போக்குகிறது. உடல் வலு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுதல் முதலியவற்றையும் தடுக்கிறது.
Post a Comment