இந்த 2 பொருட்களை சுடுநீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் அற்புதம்...


இந்த 2 பொருட்களை சுடுநீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் அற்புதம்...


தேன் மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய இரண்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை இரண்டும் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

·         தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை சம அளவு சூடான நீரில் கலந்து தினமும் காலையில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் வராது.

·         1 டேபிள் ஸ்பூன் இலவங்கப்பட்டை பவுடர் மற்றும் ½ டேபிள் ஸ்பூன் தேன் ஆகிய இரண்டையும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சிறுநீர்ப்பை தொற்றுக்கள் குணமாகும்.

·         இரவு உறங்கும் முன் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை பேஸ்ட் செய்து அதை முகப்பருவின் மீது தடவி மறுநாள் காலையில் நீரில் கழுவினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

·         தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்த கலவையை கீல்வாதம் வலி உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்யலாம் அல்லது டீ செய்து குடித்தாலும் வலி நீங்கும்.

·         2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை கலந்து தேநீர் வைத்து குடித்தால் ஒருசில மணி நேரத்தில் 1௦%கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

·         ½ டீஸ்பூன் இலவங்கப்பட்டை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை மிதமான சூடுள்ள நீரில் கலந்து 3 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் குளிர் காய்ச்சல், இருமல் மற்றும் சைனஸ் ஆகிய பிரச்சனைகள் குணமாகும்.

·         1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டீ ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி மற்றும்ஆலிவ் ஆயில் ஆகிய அனைத்தையும் கலந்து தலையில் தடவி 15 நிமிடம் கழித்து மூலிகை ஷாம்பூ கலந்து குளித்தால் முடி உதிர்வு தடுக்கப்படும்.

·         கோதுமை ரொட்டியில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடி கலந்த பேஸ்ட்டை தடவி அதை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் இதய தாக்குதலின் அபாயம் குறையும்.

·         தோல் தொற்று நோய் பிரச்சனை உள்ளவர்கள் தேன் மற்றும் இலவங்கப்பட்டை பொடி கலந்த பேஸ்ட்டை பதிக்கப்பட்ட சருமத்தில் தடவி வந்தால் சரும தொற்றுக்கள் வராமல் தடுக்கலாம்.

·         ஒரு டம்ளர் நீரில் 1 டீ ஸ்பூன் தேன் மற்றும் ½ டீ ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை கலந்து தினமும் காலை உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்ததால் உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.   

No comments